தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை 2வது ஓடிஐ துவங்கவுள்ள நிலையில் அவசர கூட்டத்துக்கு பிசிசிஐ அழைப்பு: காம்பீர், அகர்கர் பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே 2வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவசர கூட்டம் நடத்த பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்கள் விராட் கோஹ்லியின் அதிரடி சதம், ரோகித் சர்மாவின் அரை சதத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும், அடுத்து வரும் தொடர்களில் ஆடுவது குறித்து பல்வேறு யூக செய்திகள் உலவி வருகின்றன.

Advertisement

இதற்கிடையே, நாளை 2வது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள், அணி வீரர்களின் தேர்வு தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement