தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது

Advertisement

வேடசந்தூர்: கோடை மழை காரணமாக அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூரில் தக்காளிக்கு என தனிச்சந்தை உள்ளது. இங்கு எரியோடு, கல்பட்டி, அய்யலூர் வடமதுரை, கொம்பேறிபட்டி, பாகாநத்தம், வளவிசெட்டிபட்டி, குருந்தம்பட்டி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் தக்காளி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவு தக்காளி பயிர் இடுவதால் அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து எப்போதும் சீரான நிலையில் இருக்கும். தினசரி 20 முதல் 35 டன் தக்காளி வரத்து அய்யலூர் தக்காளி சந்தையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அய்யலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகளின் தோட்டத்தில் விளைவிக்கப்படும் தக்காளிகள் அதிக சேதமடைந்துள்ளது. இதனால் போதிய வரத்து இல்லாமல் அய்யலூர் தக்காளி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்து (4 முதல் 5 டன் வரை) போதிலும் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.250ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை மழை பெய்ததில் தக்காளி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இன்னும் விளைச்சல் கணிசமாக உயர 15 நாட்கள் முதல் ஒரு மாத காலம் ஆகும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News