தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டோல்கேட்டில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் சஸ்பெண்ட்

*வேலூர் எஸ்பி அதிரடி
Advertisement

வேலூர் : பள்ளிகொண்டா டோல்கேட்டில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதால் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் ஆகிய இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக ரேஷன் அரிசி, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்திச்செல்லப்படுகிறதா என போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். மேலும் விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் செல்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா காவல் நிலைய 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இருவரும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த எஸ்பி மணிவண்ணன், விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நடந்த விசாரணையில், போலீஸ்காரர் சங்கரும், ஊர்க்காவல் படை வீரர் நவீனும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement