32 சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல், இடைப்பாடி உள்ளிட்ட பல்வேறு புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகசெய்தி வந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரக்கூடும்.
புறவழிச் சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதை உடனடியாக ரத்து செய்யவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 32 சுங்கச் சாவடிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.