எய்க்ஸ் என் பிராவென்ஸ்: பிரான்சில் நடந்த டோலே கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் இனியன் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரான்சின் எய்க்ஸ் என் பிராவென்ஸில் நடந்த டோலே சர்வதேச செஸ் போட்டியில் 40 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இறுதிக் கட்டமாக நடந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர் செல்வம், போலந்து கிராண்ட் மாஸ்டர் ஜான் மாலேக் மோதினர். இருவரும் சம புள்ளிகள் பெற்ற நிலையில் டைபிரேக்கர் போட்டி நடந்தது. அதில் அபாரமாக செயல்பட்ட இனியன், 1.5 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ. 8 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.