இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
06:50 AM Apr 08, 2024 IST
வாஷிங்டன்: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது. சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது. இதேபோலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நிகழாது என கூறப்படுகிறது. இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் நவீன ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.