டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக சண்முக சுந்தரம் பதவியேற்பு
12:02 AM Jul 19, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த அ.ஜான் லூயிஸ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். அவர் பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.