Home/செய்திகள்/Tngovt Called Tender Seiyaru Chipkot Industrial Park
செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவுக்கு தொழில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
05:38 PM Nov 05, 2024 IST
Share
சென்னை: செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவிற்கு, மண்ணிவாக்கத்தில் இருந்து வந்தவாசி வரை தொழில் வழித்தடம் அமைக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 70 கிமீ நீளத்திற்கு சாலை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியுடன் சேர்த்து இந்த தொழில் வழித்தட சாலை பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.