தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட விளம்பரத்திற்காக சாலையில் விபரீத சாகசம்; ‘டைட்டானிக்’ போஸ் கொடுத்து சிக்கிய நடிகை: மூத்த நடிகர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத்: திரைப்பட விளம்பரத்திற்காக சாலையில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட பிரபல குஜராத்தி நடிகர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில நடிகர்களான டிகு தல்சானியா, பிரேம் காத்வி, நடிகை மான்சி பரேக் ஆகியோர், தங்களது புதிய திரைப்படமான ‘மிஸ்ரி’-யை விளம்பரப்படுத்தும் நோக்கில், அகமதாபாத் சாலையில் ஆபத்தான பைக் சாகசத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் மாலையில், பைக்கின் மீது நின்றபடி நடிகை மான்சி பரேக் ‘டைட்டானிக்’ போஸ் கொடுத்ததும், மற்றவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

Advertisement

இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை தாமாக முன்வந்து ‘ஏ’ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிகு தல்சானியா மற்றும் பிரேம் காத்வி ஆகிய இருவரும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பின்னர், டிகு தல்சானியா மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றை காவல்துறை வெளியிட்டது. அதில், ‘எங்களால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால்... நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்’ என்று அவர் கூறியுள்ளார். பின்னால் அமர்ந்து பயணம் செய்ததால் மான்சி பரேக் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement