திருவாரூர் அருகே நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு..!!
திருவாரூர்: திருவாரூர் அருகே நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1அரை லட்ச ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்கள் சுமார் 83 சதவீதம் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நிலையில், விலை நிலங்களில் மீதமுள்ள நெற்பயிர்களை அறுக்க முடியாமல் உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 21 சதவீதம் மழை ஈரப்பதம் உள்ளதால் ஈரப்பதம் குறைந்தபட்சம் 17 மட்டுமே எடுக்க முடிகிறது. 21 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஒன்றிய குழு சார்பில் தானிய சேமிப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி.கே சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாவதாக கோவில்வெண்ணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து ஊர்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் குறித்தும், நெல் மூட்டைகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஈரப்பத மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து வருகின்றனர். இந்த ஆய்வில் விவசாயிகள் அதிகாரிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இரண்டு பருவமழைகளால் பாதிக்கப்படுவது தமிழகம் மட்டுமே. எனவே தமிழகத்தில் தகுந்தாற்போல் தனி கொள்முதல் கொள்கை அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.