திருவாரூர் மாவட்டம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி வகுப்புகள்
*6 முதல் 9 வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்பு
*மாணவர்களுக்கு கையேடு வழங்க அறிவுறுத்தல்
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்ட கல்வி வட்டரங்களில் 6முதல் 9 வகுப்பு ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி நடைபெற்றது.முத்துப்பேட்டை ஒன்றிய நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி நடைபெற்றது.
குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றியத்தில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான திறன் பயிற்சி நடைபெற்றது.
முத்துப்பேட்டை மருதங்காவெளி நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களிடம் உள்ள கற்றல் இடைவெளியை களையும் வகையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திறன் (திறன் - திருத்தம் மற்றும் கல்வி வளர்ப்பை மேம்படுத்துவதற்கான இலக்கு உதவி)பயிற்சி ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை பாடம் கற்பிக்கக் கூடிய அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கென ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனி கையேடுகள் மற்றும் கற்பித்தல் வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி அவர்கள் முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முத்துப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 160க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த பயிற்சியில் ப ட்டதாரி ஆசிரியர்கள் ராதா, சீனிவாசன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
வலங்கைமான்: குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை வகுப்பு பள்ளியில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடக்கூடிய பட்டதாரி ஆசிரியருக்கான பயிற்சியை அகரஒகை பள்ளித் தலைமையாசிரியர் ஜெயவேல் தலைமையேற்று துவங்கி வைத்தார்கள் வட்டார கல்வி அலுவலர் விமலா பயிற்சிக்கு முன்னிலை ஏற்றார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பேராசிரியர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார் பயிற்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன் மற்றும் ஆசிரியர் கருத்தாளர்கள் காத்தமுத்து, மணிகண்டன், ஜெயசுதா ஆகியோர்கள் கலந்து கொண்டு ஒன்றியத்தில் பணிபுரியக்கூடிய சுமார் 120 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.