தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக 3,4ம் தேதிகளில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 3,4ம் தேதிகளில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வுகளான வெள்ளித்தேரோட்டம் வரும் 29ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 30ம் தேதியும் நடக்கிறது. விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளைவிட, இந்தாண்டு கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், எம்பி சி.என்.அண்ணாதுரையும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினர்.

அதன் எதிரொலியாக, 15 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு 2நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 நடைகளும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 8 நடைகளும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு 6 நடைகளும், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு 4 நடைகளும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தவிர வழக்கமாக இயக்கப்படும் தினசரி ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல 3 மற்றும் 4ம் தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் அனைத்தும், சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் பயண நேர விபரம் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News