திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் குத்திக்கொலை: 2 வாலிபர்கள் கைது
இதை அவர் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் கத்தியால், வித்யாசாகரின் கழுத்தில் சரமாரி குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வித்யாசாகர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சென்று வித்யாசாகரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்றுமுன்தினம் வித்யாசாகர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த குகனேஸ்வரன் (22), தமிழரசன் (25) ஆகியோர் வித்யாசாகரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். எதிர்பாராமல் நடந்த விபத்தின்போது ஏற்பட்ட தகராறில் வித்யாசாகர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வழிப்பறி முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா என அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கிரிவலம் வந்த பக்தர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், குமாரனந்தபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (32), பிரியா (28) தம்பதியின் மகளான பவதாரணியை(6), நேற்று முன்தினம் இரவு வீட்டருகே விளையாடியபோது தெரு நாய் கடித்தது. உடனடியாக திருப்பூர் அரசு மருத்துமனயைில் சேர்த்தனர். தகவல் அறிந்து பிரியாவின் அண்ணன் கருப்பசாமி (31), கார்த்திகேயனின் அக்காள் கணவர் குலசிவேலு (51) ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது கருப்பசாமி, தங்கை கணவரிடம் தனியார் மருத்துவமனையில் ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டு தகராறு செய்தார். அதற்கு குலசிவேலு ‘‘அரசு மருத்துவமனையில் தான் நாய்கடிக்கு தரமான மருந்து, மாத்திரைகள் இருக்கும்’’ என்றார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த குலசிவேலு கத்தியால் கருப்புசாமி கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து குலசிவேலுவை கைது செய்தனர்.