திருவண்ணாமலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 காவலர்கள் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.
நேற்று ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு பெண் மற்றும் அவருடைய சகோதிரி ஆகிய இருவரும் சாமி தரிசனம் வந்த நிலையில், அவர்கள் அங்கு இருந்து ஏந்தல் புறவழிச்சாலைக்கு செல்லும் போது அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு காவலர்கள் வந்து அந்த இளம்பெண்ணை அழைத்து சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து ஒரு இளம்பெண்ணை தனது சகோதிரி கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.
இந்த புகாரின் பெயரில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு காவலர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.