தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணியிலிருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை

Advertisement

திருத்தணி: திருத்தணி தொகுதியில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள நொச்சிலி, கிருஷ்ணமராஜுகுப்பம், விகேஆர்.புரம், கீச்சலம், காப்பூர் கண்டிகை, ஜிசிஎஸ்.கண்டிகை, இஎம்ஆர்.கண்டிகை, கொத்தூர், மிட்டூர், நல்லமநாயுடு கண்டிகை உள்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வாதாரம் தேடி, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருக்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிறைய பேர் பெங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

முன்னதாக, திருத்தணியில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருக்கு 4 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், திருத்தணியில் இருந்து நொச்சிலி, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு, சித்தூர், பலமனேரி, கோலார் வழியாக பெங்களூருக்கு செல்ல அரசு பேருந்து வசதி இல்லை. இதனால் இக்கிராம மக்கள் பெங்களூருக்கு செல்ல திருத்தணி, ஆந்திர மாநிலத்தின் பலிஜ கண்டிகை பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எனவே, நொச்சிலி உள்பட சுற்றுவட்டார 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், திருத்தணியில் இருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்து சேவையைத் துவக்க வேண்டும் என்று திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் நேற்று மாலை 30 கிராமங்கள் சார்பில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ரவீந்திரா, சஞ்சீவிராஜ், சுனில்குமார், லோகேஷ்ராஜ், வெங்கட்ரத்தினம் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினர்.

இக்கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பார்வைக்கு கொண்டு சென்று, திருத்தணியில் இருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்துகள் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 30 கிராம மக்களுக்கு திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார்.

Advertisement