திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி நாளை தொடக்கம்: 7ம் தேதி புஷ்பாஞ்சலி
அந்த வகையில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு லட்சார்ச்ச்சனை பூஜைகள் நடக்கிறது. 7 நாட்களும் வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
விழாவில் இறுதி நாளான வரும் 7ம் தேதி மாலை முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். பலர், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதையொட்டு முருகபக்தர்கள் மாலையணிந்து விரதம் தொடங்க உள்ளனர். ஏற்பாடுகளை கோயில் அறகாவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.