திருப்பூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கட்டாய பணி ஓய்வு
திருப்பூர்: திருப்பூரில் போலீஸ் உதவி கமிஷனர் கட்டாய பணி ஓய்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாநகர போலீசில் குற்ற ஆவண காப்பக பிரிவு உதவி கமிஷனராக சந்திரசேகரன் என்பவர் கடந்த 27ம் தேதி பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி திருப்பூருக்கு இடமாறுதலில் வந்தார்.இந்த நிலையில் பொறுப்பேற்ற மறுநாளே (28ம் தேதி) உதவி கமிஷனர் சந்திரசேகரனை கட்டாய பணி ஓய்வு செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு ஆணை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. பழைய குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.அவர் ஓய்வு பெற சில ஆண்டுகள் உள்ள நிலையில், கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement