திருப்பூர் மாவட்டத்தில் ரூ.950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ரூ.182 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக இரவு 8.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து இரவு உடுமலையிலேயே தங்கினார்.
இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.182 கோடி மதிப்பில் 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.950 கோடியில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். ரூ.300 கோடி மதிப்பில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் ரூ.40 கோடியில் 7 தளங்களுடன் நவீனமயமாக கட்டப்பட்டுள்ள டைட்டல் நியோ (ஐ.டி.பார்க்)-வை திறந்துவைத்தார்.