திருப்பூர் அருகே ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளர் கைது
Advertisement
திருப்பூர்: காங்கேயம் அருகே எல்லப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளர் செல்வராஜ், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.71,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement