திருப்பூரில் மன வளர்ச்சி பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டல்: அதிமுக கிளைச் செயலாளர் கைது
திருப்பூர்: அவிநாசி அருகே மன வளர்ச்சி பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில், அதிமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் (51) என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரனின் மனைவி சாந்தி அவிநாசி நகராட்சியின் 12வது வார்டு கவுன்சிலராக உள்ளார். புகாரளிக்கக் கூடாது என சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement