திருப்பத்தூர் அருகே 1970–71 ஆம் ஆண்டில், 10–ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970 -71 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் மலரும் நினைவுகள் என நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்தனர். மேலும் இந்த மலரும் நினைவு நிகழ்ச்சியில் பள்ளியில் 10-ம் வகுப்பில் பயின்ற 50க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் அவர்கள் படிக்கும் போது இருந்த ஆங்கில ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான ரத்தினன் நடராஜன் பழைய மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப்பாடம் கற்றுக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் சிறு வயதில் ஆசிரியர்களிடம் அடி வாங்கியதை நினைவு கூறும் வகையில் ஆசிரியரிடம் எங்களை அடியுங்கள் என மாணவர்கள் கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு பள்ளிக்கு 70000 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் வழங்கினார்கள். மேலும் 1970-71 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் வணிகத்துறை, வங்கி துறைகளில் உள்ளிட்ட அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.