திருப்பத்தூரில் பிளஸ்2 மாணவர்களுக்கு வினாவங்கி புத்தகம் விலையில்லா சைக்கிள்
*எம்எல்ஏ வழங்கினார்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி தனது சொந்த செலவில், மாணவர்களின் நலன் கருதி பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகம் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் மேல்படிப்பிற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
அதன்படி, திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 27 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரம் பிளஸ்2 மாணவர்கள் இப்புத்தகம் வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று கந்திலி ஒன்றியம், கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளில் பயிலும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 5ம் ஆண்டாக வினா வங்கி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வினாவங்கி புத்தகங்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த மடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினா வங்கி புத்தக தொகுப்பு, அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார்.
முன்னதாக வினாவங்கி புத்தகம் வழங்கிய எம்எல்ஏவுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.