திருப்பத்தூர் அருகே பிரியாணி மாஸ்டருக்கு ரூ.18 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33)என்பவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அலுவலகத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் அமீர் பாஷா சென்னையில் அமீர் டிரேடிங் கோ என்கிற நிறுவனம் நடத்தி அதில் 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என வந்த கடிதம் வந்துள்ளது.
மேலும் அமீர் பாஷா திருப்பத்தூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டுமே தனக்கு வங்கி கணக்கு உள்ளதாகவும் எனது பான் கார்டை வைத்து மர்ம நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை வைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.