திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.4.02 கோடி காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,119 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இவர்களில் 25,294 தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில் ரூ.4.02கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 4 அறைகளில் மட்டுமே பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
Advertisement
இலவச தரிசனத்தில் இவர்கள் 6 மணி முதல் 8 மணிக்குள் தரிசனம் செய்தனர். டோக்கன் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்றும் இன்றும் ஏழுமலையானை விரைவாக தரிசிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement