திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டும் நிகழ்வு கோலாகலம்: திருப்பதியில் நடக்கும் கருட சேவைக்காக சென்னையில் இருந்து செல்லும் திருக்குடைகள்
சென்னை: சென்னை திருப்பதிக்கு கொண்டு செல்ல படும் திருக்குடைகள் கவனித்தண்டும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். திருக்குடைகள் கவுனியை தண்டிள்ளது அதனைத் தொடர்ந்து சூரை நெடுஞ்சாலை, இறுதியாக அயனாவரம் காசி விசுவநாதர் ஆலயத்தில் இரவு தங்குகிறது. இன்று ஒருநாள் லட்சம் பேர் தற்போது சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து நாளை 23 ஆம் தேதி ஐசிஎப்,பெரம்பூர் வழியாக வில்லிவாக்கம் சௌமிய தாமோதர பெருமாள் கோவிலுக்கு சென்று இரவு தங்குகிறது. 24 ஆம் தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்று அன்று இரவு தங்குகிறது.
25ஆம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சென்று அடைந்து இரவு தங்குகிறது. 26 ஆம் தேதி திருவள்ளூர் மணவாளநகர் திருப்பாச்சி வழியாக திருச்செந்தூர் சென்று அடைந்து அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 குடைகள் சமிர்க்கப்பட்டு பின்னர் 27 ஆம் தேதி திருமலை செல்லும் திருகுடைகளை மாலை மூன்று மணி அளவில் மாடவீதி வழியாக சென்று திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு திருகுடைகள் அளிக்கப்படுகிறது.