திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
Advertisement
இந்நிலையில் நேற்று முன்தினம் 75,916 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 42,920 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ஒரே நாளில் ரூ.3.87 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, டிபிஎசி பகுதி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
Advertisement