தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறித்த நேரத்துக்கு வந்தா வெய்ட் பண்ண வேணாம்... பக்தர்களுக்கு செயல் அதிகாரி அட்வைஸ்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க கூடாது என்பதற்காக சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட், சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கான வரிசையில் வர வேண்டும். ஆனால் பல பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மிகவும் முன்னதாகவே தரிசனத்திற்கான வரிசைக்கு வருவதால் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக நேரம் குறிப்பிடப்பட்டுள்ளபடி மட்டுமே பக்தர்கள் தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisement

ஆனால், இன்னும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வெகு சீக்கிரம் வந்து வரிசைக்கு அருகில் வெளியில் காத்திருந்து சிரமப்படுகின்றனர், எனவே பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைபிடித்தால் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து திருமலையில் உள்ள பக்தர்களின் தகவலுக்காக தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். இன்று முதல் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களிலும் பக்தர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும். எனவே முன்கூட்டியே பக்தர்கள் வந்து வரிசையில் காத்திருக்காமல், திருப்பதியில் உள்ள உள்ளூர் கோயில்களுக்குச் செல்லலாம் அல்லது திருமலையில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

Advertisement