திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் சந்திரகிரி மண்டலம், ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 150வது படி அருகே நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
Advertisement
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தனியாக பக்தர்கள் செல்லாமல் கூட்டமாக செல்லும்படி அறிவுறுத்தி, குழுக்களாக அனுப்பி வைத்தனர்.
Advertisement