திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில், வன விலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் விதமாக திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் வனத்துறை ஊழியர்களுக்கு ஸ்மார்ட் ஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் சுற்றுப்பகுதியில் குரங்குகள் அவ்வப்போது வந்து பக்தர்களை சிரமப்படுத்துவதோடு, கோயில் கோபுரங்கள் மீது போடப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகளை சேதப்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக குரங்குகளை விரட்டுவதற்கு இப்போது வனத்துறை ஊழியர்களுக்கு ஸ்மார்ட் ஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சைரன் சத்தத்திற்கு குரங்குகள் அங்கிருந்து ஓடி விடுகிறது.