திருப்பதி மலைப்பாதையில் ஆக.15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிப்பு
04:46 PM Aug 12, 2025 IST
திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஆக.15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை ஆக.15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் ஆக.15ம் தேதி முதல் ஃபாஸ்டேக் நடைமுறையை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் வழங்க தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது