24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 82,149 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,578 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.85 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Advertisement
இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் வெளியே காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
Advertisement