திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
Advertisement
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை தினமான நேற்றும் இன்றும் அதிகளவு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருமலை முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருப்பதால் தங்கும் இடம் கிடைக்காமல் சாலைகளில் தங்கியுள்ளனர். நேற்று 84,571 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,711 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.70 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
இன்று காலை காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் தங்கியுள்ளனர். இதனால் சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும் என தெரிகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திலும்,நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Advertisement