திருப்பதி மலைப்பாதையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு
திருமலை: திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வருவதற்கு மற்றொரு பாதையும் உள்ளன. இவற்றில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருமலையில் இருந்து திருப்பதி வரும் மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோயில் அருகே சாலையின் குறுக்கே நீளமான மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.
Advertisement
அப்போது அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து தங்கள் வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிறிது நேரத்திற்கு பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதை அவ்வழியாக வந்த பக்தர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Advertisement