திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி என தகவல்..!!
ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு மக்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 86 ஆயிரத்து 364 பக்தர்கள் வழிபட்ட நிலையில் அவர்கள் மூலம் கிட்டத்தட்ட 4 அரை கோடி ரூபாய் காணிக்கை வந்துள்ளது. ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது. ரூ. 30,712 பக்தர்கள் திருப்பதியில் மொட்டை போட்டு தலைமுடி காணிக்கை செய்தனர். பக்தர்களின் வருகை தொடர்ந்து அதோய்கறித்து காணப்படுவதால் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.