திருப்பதி கோயில் காணிக்கை திருடிய வழக்கு: சி.ஐ.டி. விசாரணைக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு
ஆந்திரா: திருப்பதி கோயிலில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை திருடிய வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஏப்ரலில் திருப்பதி கோயிலில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை திருடியதாக தேவஸ்தான அதிகாரி புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் கோயில் மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவருக்கு எதிராக ஆந்திர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி,
விசாரணை அதிகாரியும் தேவஸ்தான நிர்வாகிகள் வழக்கில் பெரிய அளவில் சமரசம் செய்துள்ளனர் என நீதிபதி ராமகிருஷ்ணா அதிருப்தி தெரிவித்தார். சட்டங்களைக் கண்டு கொள்ளாமல் வழக்கை விரைந்து மூடி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர். மெத்தன போக்கா அல்லது சதியா என்பதை தீர்மானிக்க தீவிர விசாரணை தேவை என தெரிவித்ததுடன். தேவஸ்தான வாரிய அதிகாரிகள், விசாரணை அதிகாரி மற்றும் புகார்தாரரின் பங்கு என்ன என்பதை சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டு.
சி.ஐ.டி. பிரிவில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கக் கூடிய அதிகாரி விசாரிக்க வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.