திருப்பதி பிரம்மோற்சவ நெரிசலை கட்டுப்படுத்த உதவுவதற்காக இஸ்ரோ குழு திருமலை வருகிறது: தேவஸ்தானம் அறிவிப்பு
ஆந்திரா: திருப்பதி பிரம்மோற்சவ நெரிசல், உதவுவதற்காக இஸ்ரோ குழு திருமலை வருகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர்.23ஆம் தேதி முதல் அக்டோபர்.2ம் தேதி வரை 9 நாட்கள் திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. முதல்முறையாக கூட்டத்தை கண்காணிக்க இஸ்ரோ உடன் பேச்சு நடைபெற்றுள்ளது. செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு - கூட்ட மேலாண்மை செய்யும் வசதிகளை வழங்க இஸ்ரோ சம்மதம் தெரிவித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருமலைக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்தது. எல்&டி நிறுவனம் சார்பில் திருமலையில் சிசிடிவி-க்களை ஒருங்கிணைத்து கூட்டம் மேலாண்மை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போனால் துரிதமாக கண்டறிய ஜியோ டாக்கிங் செய்யப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது.
Advertisement
Advertisement