திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி!!
10:14 AM Aug 09, 2025 IST
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியாகினர். ஆந்திரா நெல்லூர் மாவட்டம் சாகோலு அருகே கார் சென்றபோது நேர்ந்த விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். நம்புலா வெங்கட நரசம்மா, நம்புலா சுபாஷினி, அபிராம் உள்ளிட்டோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.