திருநெல்வேலி மாநாட்டை வெற்றி பெற செய்ய 77 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம்: தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ‘வாக்கு திருடனே பதவி விலகு” என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள், கையெழுத்து இயக்கம் மற்றும் இதை விளக்கி வருகிற 7ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாட்டை வெற்றி பெறச் செய்ய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி வட சென்னை கிழக்கு மாவட்ட பார்வையாளராக-என்.ரங்கபாஷ்யம், வடசென்னை மேற்கு-இமயா கக்கன், மத்திய சென்னை கிழக்கு-எஸ்.ஏ.வாசு, மத்திய சென்னை மேற்கு-லட்சுமி ராமச்சந்திரன், தென் சென்னை கிழக்கு-ஜே.எம்.எச். ஹசன் மவுலானா எம்.எல்.ஏ, கீழானூர் ராஜேந்திரன், தென் சென்னை மத்தியம்-டாக்டர் கே. விஜயன், தென்சென்னை மேற்கு-டி.என்.முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் வடக்கு-சசிகாந்த் செந்தில் எம்.பி., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ப.செந்தமிழ் அரசு, திருவள்ளூர் தெற்கு-சசிகாந்த் செந்தில் எம்.பி., டி.எல்.சதாசிவலிங்கம். ஆவடி மாநகராட்சி-சசிகாந்த் செந்தில் எம்.பி., பூவை பீ.ஜேம்ஸ், செங்கல்பட்டு வடக்கு-இல.பாஸ்கரன், செங்கல்பட்டு தெற்கு- வழக்கறிஞர் பி.தாமோதரன், காஞ்சிபுரம்-தாம்பரம் கு.நாராயணன் ஆகியோர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேேபால 77 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.