திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி
இந்நிலையில் நேற்று (7ம் தேதி) காலை திருச்செந்தூர் வஉசி தெருவில் உள்ள பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற கனிமொழி எம்பி, பாகனின் மனைவி ரம்யா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தக்காரின் செயல்முறை ஆணை வாயிலாக ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் கோயிலில் அலுவலக உதவியாளர் பணி வழங்குவதற்கான நியமன ஆணையை வழங்கினார். பாகனின் மகள் கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.