திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை!!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரைமொழியைச் சேர்ந்த கந்தையாவை சில மாதங்களுக்கு முன் உறவினர் சிவசூரியன் வெட்டிக் கொன்றார். நிபந்தனை ஜாமினில் வந்த சிவசூரியன், தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்துள்ளார். சிவசூரியன், அவருடைய சகோதரர் சின்னத்துரை இருசக்கர வாகனத்தில் வந்தபோது, காரில் வந்த கும்பல் பைக்கை இடித்து தள்ளி இருவரையும் அரிவாளால் வெட்டியதில் சிவசூரியன் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement