திருச்செந்தூரில் கூட்டம் குறைவான நாட்களில் மட்டும் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி
மதுரை : திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் குறைவான நாட்களில் மட்டும் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என உயர் நீதிமன்றக் கிளையில் கோயில் நிர்வாகம் தரப்பு பதில் அளித்துள்ளது. பதிலை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. குறுகலான பாதைப் பகுதியில் பஞ்சலிங்கம் இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பு கருத்தில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மேலும், மூலவர் முருகன், பஞ்சலிங்கத்திற்கு பூஜைகள் செய்வதாக ஐதீகம் உள்ளதால், பஞ்சலிங்கத்திற்கு தினசரி பூஜைகள் செய்யாமல் விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement