திருச்செந்தூரில் பக்தர்கள் முகத்தில் மர்ம ஸ்பிரே அடித்த சிறுவன்: 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் முகத்தில் சிறுவன் மர்ம ஸ்பிரே அடித்ததால் 10க்கும் மேற்பட்டோர் அவதி அடைந்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சிறுவர்கள் கையில் வைத்திருந்த ஸ்பிரே அடித்து கோயில் வளாகத்தில் இருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் தகவலறிந்து வந்த கோவில் நிர்வாக பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவன் தனது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளான். அதே நேரத்தில் அவனுடன் சேர்ந்து இருந்த 3 சிறுவர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். ஆனால், அனைவருமே முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதற்கிடையில் திருச்செந்தூர் கோயில் நிற்வகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஸ்பிரே காருக்கு அடியில் கிடந்தது என எடுத்து கூறினர். அழைத்து வரப்பட்ட 3 சிறுவர்களையும் விசாரித்த நிலையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த 4 சிறுவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காருக்கு அடியில் கிடந்ததாக கூறப்படுகின்ற ஸ்பிரே கோவிலுக்கு வரும் பக்தர்களின் நகை,பணம் பறிப்பதற்காக யாரேனும் மர்ம நபர்கள் கொண்டுவந்தனரா அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்தது கீழே விழுந்துவிட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.