தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்: கோயில் நிர்​வாகம் அறிவிப்பு

தூத்​துக்​குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் என்று கோயில் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த அறநிலை​யத்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதில், கும்​பாபிஷேகம் நடத்​து​வதற்​கான நேரத்தை முடிவு செய்​வ​தில் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறு​பாடு நிலவி வந்​தது. இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தொடரப்​பட்​டு, உச்ச நீதி​மன்​றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்​களுக்கு முன்பு தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், திருச்​செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடக்​கும் நேரத்தை கோயில் நிர்​வாகம் நேற்று மாலை அறி​வித்​தது.

இதுகுறித்து அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் சு.​ஞான​சேகரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “திருச்​செந்​தூர் கோயி​லில் 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடக்​கும் குட​முழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்​பாக நடை​பெற உள்​ளது.

அதில் முக்​கிய நிகழ்ச்​சி​யான திருக்​குட நன்​னீ​ராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் நடத்​தப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார். மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் முகூர்த்த நேரத்தை கோயில் நிர்​வாகம் அறி​வித்​து, இது தொடர்​பான சர்ச்​சைகளுக்கு முற்​றுப்​புள்​ளி வைத்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.