திருச்செந்தூர் கோயிலில் மூலவர் அருகே உள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள் செய்ய கோரி மனு
மதுரை : திருச்செந்தூர் கோயிலில் மூலவர் அருகே உள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள் செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் இணை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கொரோனா காலத்துக்கு பின் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். பஞ்சலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Advertisement
Advertisement