மசினகுடி அருகே புலி நடமாட்டம்
நீலகிரி: உதகை அருகே மசினகுடியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே நடந்து வந்த புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்குவாரிக்கு மெலிந்த உடலுடன் நடக்க முடியாமல் புலி வந்ததை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புலி நடமாட்டத்தால் மசினகுடிபகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement