துறையூர் அருகே 1500 மாணவர்கள் பங்கேற்று பனை விதை நடும் பணி
துறையூர் : துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் நட்டு வைத்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பனை மரத்தின் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பு முறை இயற்கை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Advertisement
நேற்று 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பனை விதைகள் நட்டனர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் பரணி மற்றும் ஆசிரியர்கள், பனை லோகு, சமூக ஆர்வலர் தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement