திருச்சூர் வாக்காளர் பட்டியலில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி முறைகேடு: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் டஜெட் கூறியது: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தற்காலிகமாக திருச்சூரில் தங்கியிருந்த வீட்டு முகவரியில் அவரது குடும்பத்தினர் 11 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
தேர்தல் முடிந்த பின்னும் அவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விட்டனர். இந்த வீட்டில் இப்போதும் ஓட்டு இருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அவர்கள் அல்ல. இவ்வாறு கூறினார். திருச்சூர் தொகுதியில் இடது முன்னணி சார்பில் போட்டியிட்ட சுனில்குமார் கூறும்போது,’திருச்சூர் வாக்காளர் பட்டியல் முறைகேடுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’என்றார்.