உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணியில் இருக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு 2026ம் ஆண்டில் மூன்று முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை
Advertisement
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணியில் இருக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு 2026ம் ஆண்டில் மூன்று முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு டெட் தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியது. 2026ம் ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பரில் சிறப்பு டெட் தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 2026ல் நடைபெறும் சிறப்பு டெட் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்குப் பின், 2027ம் ஆண்டில் தேவைக்கேற்ப டெட் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement