மும்பை: கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள இந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்தனர். சல்மான் கான் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் அவரை கொல்லப்போகிறேன் என்றும், லாரன்ஸ் பிஷ்னோய்,கோல்டி பிரார் போன்ற ரவுடி கும்பல் தலைவர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்று பன்வாரிலால் குஜ்ஜார் (25)என்ற வாலிபர் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இதையடுத்து ராஜஸ்தானுக்கு சென்ற மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.