தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை ஜூலை 31ல் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை ஜூலை 31ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,120 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆலையில் உற்பத்தி செய்யவுள்ள வி.எப்.6, வி.எப்.7 மாடல் கார்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது
Advertisement